மடிக்கணினி அதிகமாகச் சூடாகினால் அதன் செயற்திறன் குறைவதுடன், Battery இன் ஆயுளும் பாதிக்கப்படலாம். எனவே, மடிக்கணினிகளை பயன்படுத்தும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
மடிக்கணினியை காற்றோட்டம் உள்ள தட்டையான மேற்பரப்பில் வைத்து பயன்படுத்த வேண்டும். படுக்கை, மெத்தை போன்ற மென்மையான இடங்களில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், காற்றோட்டத் துளைகளில் படியும் தூசிகளை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம். இது வெப்பம் வெளியேறுவதற்கு உதவும்.
அதேபோல், ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவதைத் தவிர்த்து, தேவையற்ற மென்பொருட்களை மூடிவிட வேண்டும். நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்தும்போது இடையிடையே ஓய்வு கொடுப்பதும் நல்லது. நேரடி சூரிய ஒளி படும் இடங்களில் மடிக்கணினியை வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மடிக்கணினி வழக்கத்திற்கு மாறாக அதிகமாகச் சூடானால், அதன் பயன்பாட்டை நிறுத்தி நிபுணரிடம் பரிசோதனை செய்வது அவசியம்.