தற்போது AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், AI செயலிகள் மூலம், புகைப்படங்கள் வீடியோக்கள் என அனைத்தையும் உருவாக்க முடிகிறது. சில AI செயலிகள் உருவாக்கும் புகைப்படங்கள் , வீடியோக்கள், ஒலிகள் சில நேரம் உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதையே கண்டறிய முடியாத வகையில் தத்ரூபமாக அமைந்திருக்கும். இதனால், பல குற்றச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதற்கு சிறந்த ஒரு தீர்வாக புகைப்படங்கள் , வீடியோக்கள் , ஒலிக் கோப்புகள் ஆகியவை AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறியும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற Google I/O நிகழ்வில், Google தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சோதனைப் பதிப்பை வழங்கியது. தற்போது அனைத்து பொதுமக்களுக்கும் அதை பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. synthid.com என்ற இணையத்தளத்தில், புகைப்படங்கள், வீடியோக்கள், ஒலிக் கோப்புகளை உள்ளிட்டால் அது AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது திருத்தப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.