ஹொங் கொங் சிக்ஸஸ் 2026ஆம் ஆண்டு தொடருக்கான குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தொடருக்காக இலங்கை அணியானது, தங்களுடைய 7 பேர்கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது. இந்த குழாத்தின் தலைவராக சகலதுறை வீரர் சங்கீத் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அனுபவமான இவருடன் சச்சித ஜயதிலக்க, இளம் வீரர்களான மொவின் சுபசிங்க, ரவிந்து பெர்னாண்டோ, விஷேன் ஹலம்பகே, முதித லக்ஷான் மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.