Salmon,Sardines,மற்றும் மெக்ரல் போன்ற மீன்களில் உள்ள Omega 3 கொழுப்பு மற்றும் அமிலங்கள் உடலின் வீக்கத்தைக் குறைத்து, மாதவிடாய் வலிகள் மற்றும் Hormone மாற்றங்களை சீராக்குகின்றன.
உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹோர்மோனைக் கட்டுப்படுத்தவும் ஒலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உதவுகின்றன.
பூசணி மற்றும் எள் விதைகள் Hormone உற்பத்திக்கு தேவையான துத்தநாகத்தை வழங்குகின்றன.
வாரத்தில் இருமுறையாவது முருங்கைக் கீரையை உணவில் சேர்க்க வேண்டும் இது உடல் சமநிலையை மேம்படுத்துகிறது.
தினமும் போதுமான அளவு கலோரிகளை எடுத்துக் கொள்வது அவசியம். பெண்களின் உடலமைப்பு குறிப்பாக கலோரிகளின் பற்றாக்குறைக்கு உணர்திறன் கொண்டவை, பெண்களின் ஹோர்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. நமது உடல் சரியான உணவைப் பெறுகிறது என்று உணராவிட்டால் முக்கியமான ஹார்மோன்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம்.