அன்றாடம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீரில் சிறிது சோம்பு கலந்து பருக வேண்டும், இது விரைவாக உடல் கொழுப்பைக் கரைக்கின்றது.
வாழைத்தண்டு சாறு , அருகம்புல் சாறு ஆகியவற்றை பருக வேண்டும். முட்டை, முளைகட்டிய பயறுகள், சோயா, கோழி இறைச்சி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது தேவையில்லாமல் அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கிறது.
அதிக மன அழுத்தம் ஏற்படும் போது Cortisol என்ற ஹோர்மோன் சுரக்கிறது. இது உடலில், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும். தியானம் அல்லது யோகா மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது செரிமானத்தை சீராக்கும்.