அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பம். இதற்காகப் பல்வேறு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதுடன், சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், சில நேரங்களில் தெரியாமல் செய்யும் சிறிய தவறுகள் சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கக்கூடும். பெண்கள் தவிர்க்க வேண்டிய 5 பொதுவான Beauty Mistakes குறித்து இங்கே பார்க்கலாம்.
1. சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது!
வெயிலில் செல்லும்போது மட்டுமல்லாமல், அன்றாட சருமப் பராமரிப்பிலும் சன்ஸ்கிரீன் முக்கியமானது. சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க, பொருத்தமான SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது.
2. மேக்கப்புடன் தூங்குவது!
நாள் முழுவதும் பயன்படுத்திய மேக்கப்பைக் கலைக்காமல் தூங்குவது சருமத்தில் எரிச்சல் மற்றும் பருக்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, தூங்குவதற்கு முன்பு முகத்தை மென்மையாகச் சுத்தம் செய்வது அவசியம்.
3. சருமத்திற்கு ஏற்ற பொருட்களைத் தேர்வு செய்யாமல் இருப்பது!
மற்றவர்களுக்குப் பொருந்தும் அழகு சாதனப் பொருட்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. எண்ணெய்ப்பசை, வறண்ட சருமம் அல்லது உணர்திறன் கொண்ட சருமம் எனத் தங்களின் சருமத் தன்மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர்வு செய்வது முக்கியம்.
4. கூந்தலை அதிக வெப்பத்தில் ஸ்டைல் செய்வது!
ஹேர் ஸ்ட்ரெய்ட்னர், curling மற்றும் ஹேர் டிரையர் போன்றவற்றை அதிக வெப்பத்தில் அடிக்கடி பயன்படுத்துவது கூந்தல் வறட்சி மற்றும் உடைதலுக்கு வழிவகுக்கலாம். வெப்பத்தைத் தணித்து பயன்படுத்துவதுடன், ஹீட் புரொடெக்டன்ட் தயாரிப்புகளையும் பயன்படுத்தலாம்.
5. பருக்களை அடிக்கடி கிள்ளுவது!
முகத்தில் தோன்றும் பருக்களை நகங்களால் கிள்ளுவது அல்லது அழுத்துவது சருமத்தில் வீக்கம், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். பருக்களைத் தொடுவதைத் தவிர்த்து, தேவையானால் சரும மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.