பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணி, 2025–2027 உலக டெஸ்ட் Championship தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்தத் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.