62 Views
அவசர நேரங்களில் உயிர்களைக் காப்பாற்ற விரைந்து செல்லும் Ambulance வாகனங்களில் சிவப்பு மற்றும் நீல நிற எச்சரிக்கை விளக்கு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு நிறம் ஆபத்து மற்றும் அவசரநிலையை உணர்த்துவதுடன், தொலைவிலிருந்தும் கவனத்தை ஈர்க்க உதவுகிறது.
அதேவேளை, இரவு நேரங்களில் நீல நிறம் தெளிவாகத் தெரிவதுடன், போக்குவரத்து நெரிசலில் Ambulance வாகனத்தை மற்ற வாகனங்களிலிருந்து வேறுபடுத்தவும் உதவுகின்றது. சிவப்பு, நீல விளக்குகள் மாறி மாறி ஒளிர்வதால் வீதியில் பயணிப்போரின் கவனம் விரைவாக ஈர்க்கப்படுகிறது.
உயிர்காக்கும் அவசரப் பயணங்களில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதால், இந்த எச்சரிக்கை விளக்குகள் Ambulance வாகனங்களுக்கு வழிவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், பயன்படுத்தப்படும் விளக்குகளின் நிறங்கள், நாடு மற்றும் அதன் போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.