நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பும்ரா முழு உடற்தகுதியுடன் இருந்தாலும்,அவருடைய பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை அளிக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பும்ரா பங்கேற்பது குறித்த இறுதி முடிவு உறுதியாகவில்லை.