தயிரை சரியான முறையில் பாதுகாப்பதன் மூலம் அதன் சுவையையும் தரத்தையும் நீண்ட நேரம் பேண முடியும்.
அவ்வாறு பாதுகாக்கக் கூடிய சிறந்த வழிமுறைகள் பின்வருமாறு...
● தயிரை எப்போதும் சுத்தமுள்ள மூடிய பாத்திரத்தில் வைத்துக் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பது சிறந்தது.
● தயிரை எடுக்கும்போது சுத்தமான உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்த வேண்டும்.
● அவ்வாறு பயன்படுத்திய கரண்டியை மீண்டும் தயிர்ப் பாத்திரத்தில் போடுவதைத் தவிர்த்தால், தயிரில் கிருமிகள் கலப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
● குளிர்சாதனப் பெட்டியில் 4°C அல்லது அதற்குக் குறைவான வெப்பநிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டவற்றைப் பின்பற்றியும் தயிரில் வழக்கத்திற்கு மாறான வாசனை, நிறமாற்றம் அல்லது பூஞ்சை காணப்பட்டால் அதனை உட்கொள்வதைத் தவிர்த்தல் நல்லது.