நேற்றைய நாள் இடம்பெற்ற இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அசத்தலான வெற்றி ஒன்றைப் பதிவு செய்தது.
குறித்த வெற்றிக்குப் பெரிதும் பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப், பரிசு பெறும்போது தோனியைப் பற்றி சில அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
"மிகச் சிறந்த மனிதரான தோனியுடன் எனக்கு இடம்பெற்ற உரையாடலின் போது, அவரது ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கேட்டறிய எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி, நீ நினைப்பதை விட உனக்கு எப்போதுமே அதிக நேரம் இருக்கு என்று அவர் சொன்ன வார்த்தையை ஞாபகம் வைத்துப் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்று கருதாமல் எனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற எனக்கு அவருடைய வார்த்தைகளும் பலம் அளித்தன" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.