கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் 406 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி 43.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,
"சமீபகாலங்களில் பந்துவீச்சின் தரம் சரிந்துள்ளது. இதைப்போல தட்டையான ஆடுகளங்களை கொடுத்தால் யாரும் பந்துவீச வரப்போவதில்லை நல்ல பந்தை வீசினால் கூட விக்கெட்டை வீழ்த்த முடிவதில்லை." என தெரிவித்துள்ளார்.