மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3 வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக சண்டிகரில் நடைபெறவுள்ள போட்டியில் இருந்து விலகியுள்ளார்.ஒக்டோபர் 3 ம் திகதி நியூ சண்டிகரில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
கவுகாத்தியில் நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா 5 ஓவர்கள் மட்டுமே வீசி 1 விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது போட்டிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டது.