80 Views
ஆஸ்துமா என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் நோய் அல்ல. இருமல், நெஞ்சில் இறுக்கம், மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடும்போது சத்தம் ஏற்படுவது போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. பரம்பரை காரணமாக சிறு வயதிலேயே சிலருக்கு இது ஏற்படலாம் என்றாலும், சுற்றுச்சூழல் காரணிகளால் பெரியவர்களுக்கும் எந்த வயதிலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். குறிப்பாக தங்களுக்கு ஆஸ்துமாவை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பது முக்கியம். வீட்டில் தூசி சேராமல் பார்த்துக்கொள்வது, புகை மற்றும் அதிக வாசனைகளை தவிர்ப்பது போன்ற எளிய நடவடிக்கைகளும் உதவக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.