RCB அணி இரசிகர்களிடம் இருந்து தான் பெற்ற அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,RCB அணி இரசிகர்களிடம் இருந்து நான் பெற்ற அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சமூக வலைதளங்களில் இரசிகர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவும் அன்பும் உண்மையிலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. என்னைப் பற்றி இரசிகர்கள் ரீல்ஸ்களும் ,வீடியோக்களும் உருவாக்கி வருகின்றனர். அது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்லவே கடினமாக உள்ளது"எனக் குறிப்பிட்டுள்ளார்.