"2027ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் நான் விளையாடுவேனா? என்பதே தனக்குத் தெரியவில்லை" என அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது,"2027 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் நான் விளையாடுவேனா என்பதே எனக்குத் தெரியவில்லை. கடந்த சில காலமாகவே ஒவ்வொரு தொடராகத்தான் எனது எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்து வருகிறேன். அந்தத் தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது.அங்கு ஒரு ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் அல்லது வென்றிருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்."எனவும் குறிப்பிட்டுள்ளார்.