Sugarfree என்ற வார்த்தை ஒரு உணவு முழுமையாக ஆரோக்கியமானது என்ற அர்த்தத்தை கொடுக்காது. பொதுவாக, இப்படிக் குறிப்பிடப்படும் உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை அல்லது குறைந்த கலோரி இனிப்பூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், ஒரு பொருளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் அதில் கொழுப்பு, கலோரி, உப்பு அல்லது காபோஹைதரேற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, Sugar free என்ற பெயரை மட்டும் பார்த்து ஒரு உணவை ஆரோக்கியமானது என்று முடிவு செய்வதைவிட, அதன் Nutrition Facts மற்றும் உள்ளடக்கங்கள் அடங்கிய பட்டியலைப் பார்ப்பது முக்கியம்.
குறிப்பாக, Sugar free மற்றும் No added sugar இரண்டும் ஒன்றல்ல. No added sugar என்பது தயாரிக்கும் போது கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது ஆனால் இயற்கையாக உணவில் இருக்கும் சர்க்கரை இருக்கலாம். எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது முன்புறத்தில் இருக்கும் விளம்பர வார்த்தைகளை மட்டும் நம்பாமல், முழுமையான ஊட்டச்சத்து விவரங்களையும் கவனிப்பது சிறந்த பழக்கமாகும்.