65 Views
ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் வைப்பது என்பது உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலையில் ஏற்படும் சில சரும நோய்களுக்கு தினமும் மருந்து கலந்த எண்ணெய் வைப்பது நல்லது என்று சருமநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்வதுண்டு.
தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும். தலையில் எண்ணெய் தினமும் வைப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.