வெற்றிலை உமிழ்நீரை அதிகரித்து, உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. வயிற்றுப் பொருமல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வெற்றிலை குணப்படுத்துகிறது.
சளி,ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு வெற்றிலை சிறந்த தீர்வாகும். வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவி சூடாக்கி மார்பகத்தில் தடவி வர சளி குணமாகும்.
வெற்றிலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம் பலமடைந்து, ஞாபக சக்தி அதிகரிக்கும். இரண்டு வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
வெற்றிலையில் Antioxidants காணப்படுவதால் வெளிப்புறக் காயங்கள் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவாகக் குணமடைய உதவுகிறது.