66 Views
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அனுமதியுடன் வாய்மொழியாகப் பதிலளித்து, தேவையான உதவிகளுடன் பரீட்சைகளை எதிர்கொண்ட தாருஷா, ருஹுண பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பீடத்தின் சமூகவியல் துறையில் கலைமாணி சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் அவருக்குப் பட்டச் சான்றிதழை வழங்கிய பல்கலைக்கழக வேந்தர் அக்குரட்டியே நந்த நாயக்க தேரர், தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று இரு கரங்களாலும் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தமை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகப் பட்டமளிப்பு விழாக்களில் வேந்தர் அமர்ந்தவாறே பட்டச் சான்றிதழ்களை வழங்கும் மரபு காணப்படும் நிலையில், தாருஷாவின் விடாமுயற்சியையும் சாதனையையும் மதித்து வேந்தர் எழுந்து நின்று கௌரவித்தமை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. உடல் ரீதியான சவால்கள் ஒருவரின் கனவுகளுக்கும் வெற்றிக்கும் தடையாக இருக்க முடியாது என்பதைத் தாருஷாவின் சாதனை எடுத்துக்காட்டுவதுடன், உண்மையான கல்வி என்பது பட்டங்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், பிறரின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் மதிக்கும் பண்பையும் வளர்ப்பதாகும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.