65 Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, IPL போட்டிகளில் வீரராகத் தொடர்ந்து விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று IPL 2027 தொடருக்கான CSK வீரர்கள் தக்கவைப்புப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுமார் 18 ஆண்டுகால அவரது IPL வீரர் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
வீரராக ஓய்வு பெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் தோனி தொடர்ந்து இணைந்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு தொடரிலிருந்து அணியின் வழிகாட்டியாக (Team Mentor) அவர் செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன், அணியின் எதிர்காலத் திட்டங்களிலும் அவர் பங்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008ஆம் ஆண்டு முதல் IPL தொடரில் விளையாடி வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்து முறை சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். அவரது தலைமைத்துவமும், ஆட்ட அனுபவமும் சென்னை அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்நிலையில், தோனியின் இந்த முடிவு இரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், வீரராக இல்லாவிட்டாலும் அணியுடனான அவரது பயணம் புதிய வடிவத்தில் தொடரவுள்ளது.