சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பிருத்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இந்தியா வருகை தந்தனர்.
இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் முதல்கட்டமாக மும்பை வந்துள்ளனர்.அவர்கள் மும்பையில் உள்ள சாலையில் சிறுமிகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.அப்போது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உடனிருந்தார்.இளவரசர் வில்லியமுக்கு ஒரு சிறுமி பந்துவீசி மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து, டெண்டுல்கருக்கு இளவரசர் வில்லியம்ஸ் பந்துவீசினார்.