செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், உலக சந்தையில் Smart கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 30 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. AI சேவைகளை இயக்குவதற்கான தரவு மையங்களின் தேவை அதிகரித்துள்ளதால், Memory Chips களுக்கான கேள்வியும் உயர்ந்துள்ளது.
தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் இந்த Memory Chips களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக, அவற்றின் விலைகள் உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, குறைந்த விலை தொலைபேசிகளின் விற்பனை அதிகளவில் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2026ஆம் ஆண்டில் உலகளாவிய தொலைபேசி விற்பனை சுமார் 106.7 கோடியாக இருக்கும் எனவும், 2027ஆம் ஆண்டில் அது 91.1 கோடியாகக் குறையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய தொலைபேசிகளை வாங்கத் திட்டமிடுவோர் அதிக செலவை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.