பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகிறது.
குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டு வீரரான Towhid Hridoy, டெஸ்ட் போட்டியொன்றில் பங்களாதேஷ் அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
இதற்கு முன் பங்களாதேஷ் அணிக்காக Mushfiqur Rahim 219 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை, 242 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் Hridoy முறியடித்துள்ளார்.