சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா தற்போது புதிய சாதனையொன்றைப் படைத்திருக்கிறார்.
ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ரோகித் சர்மா.
இந்த வரிசையில், 51 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக Shahid Afridi 50 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்திலும், Chris Gayle 45 சிக்ஸர்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.