இன்றைய காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசி மனித வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒரு பகுதியாக மாறியுள்ளது. தகவல் தொடர்பு, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் வேலைவாய்ப்புகள் எனப் பல தேவைகளுக்காக நாம் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறோம்.
இருப்பினும், அளவுக்கு அதிகமாகவும் இடைவேளையின்றியும் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவது உடல் மற்றும் மனநலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, உடல் நலம் பாதிக்காமல் கையடக்கத் தொலைபேசியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்...
● ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், சுமார் 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 விநாடிகள் பாருங்கள்.
● கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும்போது தலையைக் குனிந்த படி வைத்திருக்காமல் கழுத்தை நேராக வைத்திருக்க வேண்டும்.
● தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
● அடிக்கடி இடைவேளை எடுத்து நடைப்பயிற்சி உள்ளிட்ட உடல் இயக்கங்களில் ஈடுபடுங்கள்.
● தேவையற்ற அறிவிப்புகளை அணைத்து, கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டிற்கு என நேர வரம்பை அமைத்துக்கொள்ளுங்கள்.