திறந்தவெளியில் விற்கப்படும் உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்கவும். இவற்றில் கிருமித்தொற்று மிக எளிதாக ஏற்படும்.
கீரைகள் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் பூச்சிகள் மற்றும் கிருமிகள் கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் மழை நேரங்களில் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மழைக்காலத்தில் சமிபாட்டுத் திறன் குறைவாக இருக்கும் ஆகவே எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கொதிக்க வைக்காத தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும். அசுத்தமான தண்ணீரால் கொலரா மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவக்கூடும் முடிந்தவரை கொதித்தாறிய நீரைப் பருக்க வேண்டும்.
சரியாகக் காயாத ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். இது Fungal மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும். கைகளை நன்றாகக் கழுவாமல் முகம், கண்கள் அல்லது உணவைத் தொடுவதைத் தவிர்க்கவும் மழைக்காலத்தில் வைரஸ் கிருமிகள் கைகளின் மூலமாகவே இலகுவாகப் பரவும்.