சன்ஸ்கிரீமைத் தேர்ந்தெடுக்கும்போது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட, பரந்த அளவிலான புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் (Broad Spectrum) சன்ஸ்கிரீமைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெளியில் செல்வதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு முகம், கழுத்து, காதுகள் உள்ளிட்ட சூரிய ஒளி படும் பகுதிகளில் பயன்படுத்துவது சிறந்தது.
மேலும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீமை மீண்டும் பயன்படுத்த வேண்டும். வியர்த்தாலோ, நீந்தினாலோ அதற்கேற்றவாறு மீண்டும் பயன்படுத்துவது அவசியம்.
மேகமூட்டமான நாட்களிலும் சூரியக் கதிர்கள் சருமத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், தினசரி சருமப் பராமரிப்பில் சன்ஸ்கிரீமுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.