மனிதர்கள் செய்யும் அன்றாட வேலைகளை மேற்கொள்ளும் மனித வடிவ ரோபோக்கள், அமெரிக்காவின் San Francisco நகரில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ரோபோக்கள் தரையை வெற்றிடக் கருவி மூலம் சுத்தம் செய்தல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் மேசை உள்ளிட்ட மேற்பரப்புகளைத் துடைத்தல் போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது.
இந்த ரோபோக்கள் தற்போது முழுமையாக தன்னாட்சி முறையில் இயங்கவில்லை. ஒவ்வொரு சுத்தம் செய்யும் பணியின்போதும், வேறு இடத்தில் இருக்கும் பயிற்சி பெற்ற மனிதர் ரோபோவை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவின் உணரிகள் அந்த இயக்கத்துக்கு உதவுகின்றன.
மனிதர்களைப் போல வேகமாகவும் திறமையாகவும் இன்னும் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும், வீட்டு வேலைகளை ரோபோக்கள் நேரடியாக மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது ரோபோ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.