Whatsapp பயனாளர்கள் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதியை உருவாக்கும் பணிகளில் Meta நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் குறுஞ்செய்திகள், இணையத்தள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப வேண்டிய திகதி மற்றும் நேரத்தை முன் கூட்டியே தெரிவு செய்யலாம்.
குறிப்பிட்ட நேரம் வந்ததும், பயனர்கள் மீண்டும் நேரடியாக அனுப்ப வேண்டிய அவசியமின்றி செய்திகள் தானாகவே அனுப்பப்படும். கையடக்க தொலைபேசி இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் செய்திகள் அனுப்பப்படும் வகையில் இந்த புதிய முறை உருவாக்கப்படவுள்ளது.