லோகேஷ் கனகராஜின் கதை, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘BENS’ திரைப்படத்தின் 4 ஆம் கட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது
இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ரவி மோகன், சம்யுக்தா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர். தற்போது நிவின் பாலி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில், படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இடைவெளி இருந்ததால் ‘BENS’ திரைப்படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியிருந்தது. தற்போது படப்பிடிப்பு மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், LCU இரசிகர்களுக்கு இத்திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.