மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி நாளை நடைபெற உள்ளது.லக்னோவில் உள்ள மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு போட்டி இடம்பெறவுள்ளது.