இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி, சினிமா இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கலாநிதி மாறனின் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தின் மீதான ஆவல் உலகெங்கிலும் உள்ள திரை இரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்நிலையில், இரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் விறுவிறுப்பான Trailer வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி (05.10.2026) வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.