இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அணித்தலைவர் சுப்மன் கில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
37 வயதான விராட் கோலி மற்றும் 39 வயதான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த சுப்மன் கில், இருவரும் தற்போது சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறார்கள், அணிக்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். அதேபோல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கே.எல்.ராகுலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்”
தொடர்ந்து, அணியில் அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள தற்போது போதிய கால அவகாசம் இல்லை என கில் கூறினார்.
“அடுத்த தொடர் முதல் கிடைக்கும் வீரர்களை வைத்து, எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் களமிறக்க விரும்பும் அணியின் கூட்டணியை இப்போதே உருவாக்கத் தொடங்க வேண்டும்” என்பதே அவரது கருத்தாக இருந்தது.