தொலைபேசியில் Battery நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருக்க, Charge செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது முக்கியமாகும். Battery முழுமையாக தீரும் வரை பயன்படுத்தாமல், சுமார் 20 சதவீதம் சார்ஜ் இருக்கும் போதே Charger இல் இணைப்பது நல்லது.
மேலும், ஒவ்வொரு முறையும் 100 சதவீதம் வரை Charge செய்வதை தவிர்த்து, 80 முதல் 90 சதவீதம் வரை Charge செய்வது Battery இன் ஆயுளுக்கு உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அடிக்கடி Charge செய்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் தெரிவிக்கின்றனர்.