58 Views
சமூக வலைத்தளங்களில் தற்போது Chihuahua இனத்தைச் சேர்ந்த குட்டி நாய் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் வகையில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ள இந்த சிறிய நாய், அதன் தோற்றத்தாலும் அணிந்திருக்கும் பாதுகாப்பு உபகரணங்களாலும் இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, 21 செ.மீ. உயரம் கொண்டதாகக் கூறப்படும் இந்த சிறிய நாய், தனது அளவுக்கு மாறாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிய இன நாய்களுக்கு வழங்கப்படும் பணிகளைப் போலவே, இந்த Chihuahua-வும் குறிப்பிட்ட பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குட்டி நாயின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், “இவ்வளவு குட்டியாக இருந்தாலும் வேலையில் இவ்வளவு கெத்து!” என பலரும் வேடிக்கையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த Chihuahua தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் நாய் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.