மன அழுத்தம் இருப்பதை சில உடல் மற்றும் மன அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். காரணமின்றித் திடீரென அழுகை வருவது, மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலும் மனம் கலங்குவது போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
அதேபோல், ஓய்வாக அமர்ந்திருக்கும் போது கைவிரல் தானாக அசைவது அல்லது அடிக்கடி துடிப்பது, மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆகவே இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மேலும் கண் இமை அடிக்கடி துடிப்பதும் மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே, உடலில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தொடர்ந்து தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல், தேவையான பரிசோதனைகளுக்காக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.