பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இம்மாதம் மோதவுள்ளன.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் முக்கியமான மாற்றங்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மத்தியவரிசை வீரர் சஹான் ஆராச்சிகே ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.