இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்துவரும் திரைப்படம் தான் ஓம். இத்திரைப்படத்தில் சாய்பல்லவி, மம்முட்டி, ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் நடிகை சாய் பல்லவி இத்திரைப்படத்தில் பெண் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை சாய் அபயங்கரின் இசையும் இத்திரைப்படம் மீதான இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.