44 Views
தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் ‘சீன்’ திரைப்படம்.நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரைத் திரைப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு 'சுஷின் ஷ்யாம்' இசையமைத்துள்ளார். 'வினீத் அகஸ்டியன்' ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் 'ழகரம்' ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளன. ஏற்கனவே வெளியான பாடல்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புதிய போஸ்டர் இணையத்தில் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சூர்யாவின் வித்தியாசமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தைத் திரையில் காண இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.