இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் - கமல் ஹாசனின் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இருப்பினும் அதன்பின், இப்படம் குறித்த எந்தவொரு தகவலும் இல்லாதது இரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றியடைந்துள்ள நிலையில், விரைவில் அறிவிப்புக்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஹ்ரித்திக் ரோஷனை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்திய ஹ்ரித்திக் ரோஷன், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கப்போகிறாரா என இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.