போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு 30 நாட்கள் விளையாடத் தடை விதித்துள்ளது.
தேசிய அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ ப்ரோயென்சா, ரொனால்டோ மீண்டும் அணியில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் தடை விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு அவர் மீண்டும் தேசிய அணிக்காக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.