தற்போது எம்மில் பலரின் Facebook கணக்குகள் Hack செய்யப்படுகின்றது. இதற்கு விரைவாக ஒரு தீர்வெடுப்பது மிக நல்லது. உங்கள் Facebook கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க Meta தற்போது பல வழிமுறைகளை வழங்குகிறது. இருப்பினும், உங்கள் கணக்கு Hack செய்யப்பட்டதாக நீங்கள் நினைத்தால், அதை மீட்டெடுத்து மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்குப் பல வழிகள் உள்ளன.
Login பக்கத்தில் Forgot Password தெரிவு செய்யவும், பின்னர் உங்கள் கணக்கைத் தேடிக் கண்டுபிடித்த பின், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம் அணுகல் இல்லை என்றால் "No longer have access to these" என்பதைத் தெரிவு செய்யவும்.
அங்கு உங்கள் புதிய மின்னஞ்சலை உள்ளிட்ட பிறகு, Reveal My Trusted Contacts என்ற கேள்வி வந்தால், உங்கள் நண்பர்களின் பெயரைக் குறிப்பிட்டு, பேஸ்புக் வழங்கும் ரகசியக் குறியீட்டை அவர்களிடம் கேட்டுப் பெற்று உள்ளிடலாம்.
Facebookஇல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மாற்றிய பின்னர் உங்களுடைய பழைய மின்னஞ்சல் முகவரிக்கு முகநூலிடம் இருந்து ஒரு பாதுகாப்பு மின்னஞ்சல் வந்திருக்கும். அந்த மின்னஞ்சலை திறந்து, அதில் காணப்படும் Secure your account அல்லது If you didn't do this, please secure your account என்ற தகவலை தெரிவு செய்வதன் மூலம், Hacker செய்த மாற்றங்களை ரத்து செய்து உங்கள் கணக்கை மீட்டெடுக்க முடியும்.