தலைச்சுற்றல் ஏற்படுவதை உணர்ந்தவுடன், கீழே விழுந்து காயம் ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக ஒரு இடத்தில் அமரவும். தலையை வேகமாக திருப்புவதோ அல்லது திடீரென எழுந்து நிற்பதையோ தவிர்க்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் தலைச்சுற்றல் வரலாம். எனவே உடனடியாக தண்ணீர் குடிக்கவும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் மயக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே பழச்சாறு அல்லது குளுக்கோஸ் தண்ணீர் குடிப்பது சர்க்கரை அளவை உயர்த்த உதவும்.
மூச்சு திணறல் ஏற்படாதவாறு நல்ல காற்றோட்டமான சூழலில் ஓய்வெடுக்கவும். தேநீர் மற்றும் அதிக காரம் உள்ள உணவுகள் தலைச்சுற்றலை அதிகமாக்கும். எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இரும்புச்சத்து மற்றும் vitamin B12 நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.