chocalate சுவையுடன், உள்ளே இனிப்பான கரமல் நிரப்பப்பட்ட உருளைகளை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கோதுமைமா – ½ கோப்பை
- கொக்கோ பவுடர் – 2 மேசைக்கரண்டி
- பால் – ½ கோப்பை
-வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- சீனி – 2 மேசைக்கரண்டி
-மில்க்மைட் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொக்கோ பவுடர் , பால், சீனி மற்றும் ஒரு மேசைக்கரண்டி உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிகளின்றி நன்றாகக் கலக்கவும். பின்னர் ஒட்டாத பாத்திரத்தில் சிறிதளவு மாவை மெல்லிய அடுக்காக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
அடுத்ததாக, மில்க்மைட் மற்றும் மீதமுள்ள வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, குறைந்த தீயில் தொடர்ந்து கிளறிக் கெட்டியான இனிப்புக் கலவையாகத் தயாரிக்கவும்.
கலவை ஆறியதும், வேகவைத்த chocalate அடுக்கின் ஒரு முனையில் அதனை வைத்து மெதுவாக உருளை வடிவில் சுருட்டவும். இதேபோல் மற்ற உருளைகளையும் தயாரித்துப் பரிமாறலாம்.