இந்திய கிரிக்கெட் அணி ஐந்து T20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் T20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. நியூசிலாந்து ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் கூடுதலான வேகப்பந்து வீரர்களுடன் இரு அணிகளும் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.