பெண்களின் அழகில் முக்கியப் பங்கு வகிப்பது அவர்களின் கைகளும், நகங்களும் தான். பலரும் தங்களுக்கு நகம் நீளமாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், நகம் வேகமாக வளர்வது நல்லதா அல்லது அது ஏதேனும் உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.
பொதுவாக நகம் வேகமாக வளர்வது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி ஆகும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதையும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாகக் கிடைப்பதையும் இது குறிக்கிறது.
குறிப்பாக, இளமைப் பருவம் மற்றும் கர்ப்பக் காலத்தில் ஹார்மோன்களின் செயல்பாட்டால் நகங்கள் வேகமாக வளரும். மாறாக, நகம் மிக மெதுவாக வளர்ந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ரத்த சோகை இருக்கலாம்.
நகங்களை பராமரிக்கும் முறைகள்,
நகம் வளர்வது எவ்வளவு முக்கியமோ, அதை ஆரோக்கியமாகப் பராமரிப்பது அதைவிட முக்கியம். நகங்களை எப்போதும் சுத்தமாகவும், உலர்ந்தும் வைத்திருக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை Olive எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்வதன் மூலம்நகங்களுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கும். நகங்களை வெட்டும் போது சரியான நெயில் கட்டர்களைப் பயன்படுத்த வேண்டும்.