அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கிறிஸ் லின், இங்கிலாந்தில் நடைபெற்ற T20 பிளாஸ்ட் தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடினார்.இதையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான ஊக்கமருந்து சோதனையில் லின்னின் சிறுநீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கொக்கைன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
முதலில் 3 மாதங்கள் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், லின் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை திட்டத்தை முடித்ததற்கான ஆதாரத்தை அளித்தார். இதையடுத்து,அவரது தண்டனை காலம் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.