இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து குழாம்கள் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (NZC) மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இரு பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கும் அணிகளில் உபாதைகளில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாத மார்க் சாப்மன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெறவில்லை. நியூசிலாந்து இந்தியாவுடன் ஆடிய T20 தொடரிலும் உபாதைகள் காரணமாக இவர்கள் பங்கேற்கவில்லை.
முன்னதாக நடைபெற்ற T20 தொடரின் இறுதி இரண்டு போட்டிகளுக்குமான அணியில் உள்வாங்கப்பட்டிருந்த விக்கட்காப்பாளர் மற்றும் துடுப்பாட்டவீரர் டிம் செய்பார்ட், தற்போது முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.