5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள Miko 3 கற்றல் ரோபோ தற்போது கவனம் பெற்றுள்ளது.சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, குழந்தைகளுடன் உரையாடுவது மட்டுமின்றி, விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கிறது.
இந்த ரோபோவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் உரையாடவும், கதைகள், விளையாட்டுகள் மற்றும் மொழிப் பயிற்சிகள் வாயிலாக குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கவும் உதவுகிறது.
குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், STEM சார்ந்த விளையாட்டுகள் இந்த ரோபோவின் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள் ரோபோவை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள், அவர்களின் கற்றல் முன்னேற்றம் எவ்வாறு காணப்படுகிறது உள்ளிட்ட விவரங்களைச் செயலி மூலம் பெற்றோர் கண்காணிக்கலாம்.